ஜெயிலர் படத்தின் வசூலுக்கு சங்கு ஊத காத்திருக்கும் லியோ.? ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடியா..

Leo pre bokking collection : தளபதி விஜய் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி படமாக மாறுகிறது அந்த வகையில் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ தரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் படம் மிகப்பெரிய ஆக்ஷன் பாக் திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தில் விஜயுடன் கை கொடுத்து சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன்,  அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த்,  பிக் பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் என்ன பெரிய திரை பட்டாளமே நடித்துள்ளது. லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக ரிலீசாக உள்ளது.

அதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரைலர் போன்றவற்றை வெளியிடை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ரிலீஸ்க்கு இன்னும் பல நாட்கள் இருக்கின்ற நிலையில் லியோ இப்பவே  வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்து விட்டது.

தளபதி ரசிகர்கள் இந்தியாவும் தாண்டி வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள் குறிப்பாக UK அதிக ரசிகர்கள் இருக்கின்றார்கள் தற்பொழுது டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகியுள்ளதால் அங்கு போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டை வாங்கி வருகின்றனர். இதுவரை மட்டுமே அங்கு 1.75 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் விற்று வருகிறது.

இதற்கு முன்பு வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் அங்கு முதல் நாளில் 1.63 கோடி வசூல் செய்தது. லியோ தொடர்ந்து ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருவதால் ஜெயிலர் படத்தின் வசூலை தட்டி தூக்கும் என ரசிகர்கள் இப்பொழுது அடித்து கூறி வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..

Exit mobile version