எதிரிகளை துரத்தும் தளபதி விஜய்! வைரலாகும் “லியோ போஸ்டர்”

Leo Poster :  லோகேஷ் கனகராஜ் இயக்கம் ஒவ்வொரு படமும் பெரிய வெற்றியை பதிவு செய்கிறது அந்த வகையில் கமலின் விக்ரம் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து லியோ படத்தை இயக்கிய உள்ளார் படத்தின் படபிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் படக்குழு போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது ஆனால் அதிகமாக ஆக்சன் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் படத்தில் விஜய் உடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன்..

சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் என பல திரைப் பட்டாளங்கள் நடித்துள்ளனர். படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நான் ரெடி பாடல் போன்றவை வெளிவந்து மிரட்டிய நிலையில் அடுத்ததாக ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை..

மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் லியோ டீம் தற்பொழுது ஒரு வேலை பார்த்துள்ளது ஆம் லியோ படத்திலிருந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் விஜய் மரங்களுக்கு நடுவே ஓடி வருவது போல் அந்த போஸ்டர் இடம் பெற்றுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் வெறித்தனம் வேற லெவல் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் லியோ படத்தின் போஸ்டர்.

Leo Poster
Leo Poster