விஜயின் கோட்டை என சொல்லப்படும் பிரபல திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படவில்லை.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

leo review : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் மிஸ்கின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளார்கள்.

படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் லியோ திரைப்படம் முதலில் ஒரு சில திரையரங்கில் திரையிடப்பட மாட்டாது என போர்டு வைத்தார்கள் அதற்குக் காரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கம் சங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தார்கள் அது கடைசியில் சுமுகமாக முடிந்தது பிறகுதான் திரைப்படம் ரிலீஸ் உறுதி செய்தார்கள் பிரபல திரையரங்குகள்.

லியோ படத்தில் வில்லனாக நடிக்க “சஞ்சய் தத்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆத்தாடி ஆத்தா

அந்த வகையில் ரோகிணி திரையரங்கம் வெற்றி திரையரங்கம் ஆகிய திரையரங்குகள் அடங்கும்  இந்த நிலையில் திருச்சியில் பிரபல திரையரங்கமான சாந்தி சினிமாஸ் திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்பட மாட்டாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள். அதில் அவர் கூறியதாவது லியோ திரைப்படம் திரையிடப்பட மாட்டாதற்கு காரணம் அவங்களுடைய டிமான்ட் கண்டிஷன் தான் எனக் கூறியிருக்கிறார்

அவர் கூறியதாவது எங்களை விட அதிகமான கெப்பாசிட்டி உள்ள திரையரங்கில் அவர்கள் டோட்டல் கலெக்ஷனில் 85 சதவீதம் கேட்க கேட்கிறார்கள் அவங்களுடைய கணக்கு 30 லட்சம் என்றால் 20 லட்சம் கேட்கிறார்கள் ஆக மொத்தம்  7 லட்சம்  கையில் இருந்து போட்டு கொடுப்பது போல் வருகிறது இந்த பிசினஸை யார் எப்படி பண்ணுவார்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணாமலையை தூக்கிய போலீஸ்.. ஹனிமூன் போன ரவி – ஸ்ருதி.! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இதனை சாந்தி திரையரங்கில் இவர்கள் பண்ண கூடாது என்பதற்காக மற்ற திரையரங்க உரிமையாளர்கள் சேர்ந்து செய்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் லியோ பற்றி கேக்குறாங்க அவங்க கிட்ட பதில் சொல்ல முடியாது அவர்களுக்கு புரியவும் புரியாது என கூறியுள்ளார்.

10 வருடத்திற்கு முன்பு இது மாதிரி கிடையாது அப்போ தியேட்டர் கம்மி ஆனா இப்ப மூணு கிலோ மீட்டருக்கு ஒரு தியேட்டர் இருக்கு எல்லா தியேட்டரிலும் ஒரே திரைப்படத்தை போடுறாங்க அப்புறம் எப்படி கலெக்ஷன் வரும் அப்பொழுது ஏதாவது ஒரு திரைப்படம் வெளியானால் ஒரு திரையரங்கில் போடப்பட்டால் இன்னொரு திரையரங்கில் போட மாட்டார்கள் ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது அனைத்து திரையரங்களிலும் ஒரே திரைப்படம் ஓடுகிறது என கூறியுள்ளார்.