Leo new poster : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் குடும்ப சப்ஜெக்ட் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது இதிலிருந்து மீண்டு வர ஆக்சன் இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது ஸ்டண்ட் காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என பேச்சுக்கள் அடிபடுகிறது. இதனால் லியோ படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன்..
ப்ரியா ஆனந்த், அர்ஜுன், த்ரிஷா, சாண்டி மாஸ்டர், பிக் பாஸ் ஜனனி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் படக்குழு இசை வெளியீட்டு விழா, டிரைலர் போன்றவற்றை வெளியிட முனைப்பு காட்டி வருகிறது அதற்கு முன்பாகவே ரசிகர்களையும் கவர்ந்து இழுக்க படக்குழு..
அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது நேற்று லியோ போஸ்டர் ஒன்றை வெளியிட்டது அதில் விஜய் பனி மலைகளுக்கு நடுவே ஓடி வருவது போல அந்த போஸ்டர் இருந்தது. அது மக்கள் மத்தியில் வைரலான நிலையில் இன்று 6:00 மணிக்கு இன்னொரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
துப்பாக்கி நடுவில் விஜய் சோகமாக உட்கார்ந்து இருக்கிறார். இந்த போஸ்டரும் தற்பொழுது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கத்தில் பெரிய அளவில் பரப்பி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த புதிய போஸ்டரை..