லியோ படத்தில் விஜய் பாடிய பாடல் செய்த மிகப்பெரிய சாதனை கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.?

leo naan redy
leo naan redy

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது தளபதி என்ற அந்தஸ்துடன் சினிமாவில் வலம் வருகிறார் இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் தான் தற்பொழுது விஜய் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது அது மட்டும் இல்லாமல் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு விஜய் உடன் மீண்டும் திரிஷா இணைந்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் மேலும் லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத் அர்ஜுன் கௌதம் மேனன் மேத்யூ தாமஸ் மன்சூர் அலிகான் ப்ரியா ஆனந்த் சாண்டி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

கண்டிப்பாக ஒவ்வொரு பாடலும் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது மனோஜ் பரமஹம்சா படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு.

சமீபத்தில் விஜயின் பர்த்டே என்பதால் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்கூழு விஜய் இந்த திரைப்படத்தில் பாடிய பாடலையும் வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்து கூறும் வகையில் பட குழு வெளியிட்டது. அந்த வகையில் நான் ரெடி என்ற பாடலை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரித்து செய்துள்ளது.

தளபதி விஜய் பாடிய நான் ரெடி பாடல் youtube-ல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.