LEO – வில் விஜயின் சாப்டர் அவ்வளவுதான்.! கையில் காப்புடன் லோகேஷ் வெளியிட்ட புதிய அப்டேட்.!

Leo movie : லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லியோ என்ற திரைப்படத்தை தளபதி விஜயை வைத்து இயக்கி வருகிறார். இதற்கு முன் விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். லோகேஷ் கனகராஜ் ஆனால் 50 சதவீதம் விஜய் படமாகவும் 50 சதவீதம் லோகேஷ் சாயலிலும் இருந்தது மாஸ்டர் திரைப்படம்.

இந்த நிலையில் லியோ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் வாயலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் ,என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தினை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தான் தயாரித்து வருகிறார்.

படத்தை வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு. லொகேஷன் வழக்கமான போதை பொருள் கதை களத்தில் இந்த திரைப்படம் உருவாகிறது என கூறப்படுகிறது, அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் லொகேஷன் எல்சி யூவிலும் இருக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

அப்படி இருக்கும் நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் பாடலான நான் ரெடி என்ற பாடலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் படக்குழு. இந்த பாடல் வெளியாகி 55 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்து சாதனை பெற்று வருகிறது.

சென்னை ஹைதராபாத் காஷ்மீரில் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் லியோ திரைப்படத்தின் தளபதி விஜய்க்காண படபிடிப்பு காட்சிகளை நிறைவு செய்துள்ளார் தளபதி விஜய் இது தொடர்பாக விஜயுடன் மோதுவது மாதிரியான புகைப்படத்தை பகிர்ந்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய் தனது பகுதி படப்பிடிப்பை முடித்து விட்டார் என அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இரண்டாவது முறை இந்த பயணத்தை சிறப்பாக மாற்றியதற்கு மிகவும் நன்றி எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment