“லியோ” படத்தில் விஜய் கெட்டப் இதுதான்.? ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கசிந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர், வாரிசு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதன் காரணமாக விஜயின் சம்பளம் உயர்ந்து உள்ளதோடு மட்டுமல்லாமல் மார்க்கெட்டும் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது.

வாரிசு படத்தை தொடர்ந்து உடனடியாக  தளபதி விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த படம் முழுக்க முழுக்க சர்வதேச அளவில் நடக்கும் போதை பொருளை மையமாக வைத்து படம் நகரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் இந்த படத்தில் ஆக்சன் காட்சிக்கு பஞ்சம் இருக்காது  லியோ  திரைப்படத்தில்  விஜய் உடன் கைகோர்த்து சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி, சந்திப் கிஷன்  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர்.

லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தொடர்ந்து லியோ படபிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியே கசிந்த வண்ணமே இருக்கின்றன. அதில் ஒன்றாக லியோ படபிடிப்பு தளத்தில் விஜய் படக்குழுவினருடன்..

நின்று எடுத்துக்கொண்ட ஒரு க்யூட் புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் லியோ திரைப்படத்தில் தளபதி விஜயின் கெட்டப் இதுதானா எனக் கேட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

vijay
vijay

Leave a Comment