என் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தால் எனக்கு வேலையே இல்லாமல் போயிருக்கும்.! லியோ குறித்து மனம் திறந்த மடோனா செபஸ்டியன்.

leo movie madonna sebastian : நடிகை மடோனா செபஸ்டியன் லியோ திரைப்படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். லொகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தில் மடோனா செபஸ்டியன் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் விஜய் அல்லது விஜயின் தங்கையை காவு கொடுக்க வேண்டும் என கூறியதால் விஜயின் தங்கையை காவு கொடுக்க சஞ்சய் தத் முடிவு செய்வார். பிறகு அதிலிருந்து எப்படி விஜய் காப்பாற்றுகிறார் ஆனால் காப்பாற்றியும் அவர் தங்கையை சுட்டு விடுகிறார்கள் இதனால் விஜய் தலைமறைவாகிறார் அதன் பிறகு நடக்கும் சம்பவமே லியோ திரைப்படத்தின் முழு கதை.

கதிர் முகத்தில் காயத்தை பார்த்து அரண்டு போன குணசேகரன்.! இது வேற மாதிரி இருக்கும் என பொடி வைத்து பேசும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மடோனா செபஸ்டியன் தான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சமந்தா தான் என ஒரு தகவல் வெளியாகி வந்தது. அது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா என தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு பதில் அளித்த மடோனா செபஸ்டியன் நான் அது குறித்து எதுவும் விசாரிக்கவில்லை என ஒரேடியாக வாயை மூட வைத்தார்.

ஆனால் ஒருவேளை லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் நான் இதை கேட்டிருந்தால். என் கதாபாத்திரத்தில் முதலில் தேர்வானது யார் என கூறி இருப்பார். ஆனால் அது குறித்து நான் அவரிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை மிகவும் ஜாலியாக பழகக் கூடியவர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பில் விஜையுடன் நடனமாட வேண்டும் என கூறினார்கள் நான் அதிர்ச்சி அடைந்தேன் ஏனென்றால் விஜய் பயங்கரமாக நடனமாடுவார் அவருடன் சேர்ந்து இணையாக நடனம் ஆட வேண்டும் என்பது மிகவும் கஷ்டமான ஒன்று.

வீட்டு பத்திரத்தை வைத்து அப்பாவை காப்பாற்ற மீனாவை தேடி திரியும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

ஆனால் எதையும் வெளி காட்டிக் கொள்ளாமல் நான் நடனமாடி முடித்து விட்டேன் மேலும் தொகுப்பாளர் மடோனா செபஸ்டியன் அவர்களிடம் விஜய் இரட்டையராக நடித்திருந்தால் அதாவது உங்கள் கதாபாத்திரத்தில் இன்னொரு விஜய் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் உங்களுடைய பதில் என்ன என கேள்வி எழுப்பியதற்கு மடானா செபஸ்டியன் எனக்கு பதிலாக இன்னொரு விஜய் நடித்திருந்தால் எனக்கு வேலையே இல்லாமல் போயிருக்கும் நல்லவேளை அப்படி ஒரு முடிவை அவர்கள் எடுக்கவில்லை என சிரித்தபடியே பதில் கூறினார்.

Exit mobile version