மாஸ்டர் படத்தில் பூனையை பார்த்தீங்க.. லியோ படத்தில் இதுதான்.? முக்கிய பிரபலம் வெளியிட்ட புகைப்படம்

திரை உலகில் தோல்வியை காணாத நடிகர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நிலையில் இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க விஜய் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் இரவு பகல் பார்க்காமல் நடித்து வருகிறார். முதல் கட்ட சூட்டிங் சென்னையில் வெற்றி கரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிர் என்று கூட பார்க்காமல் விறுவிறுப்பாக எடுத்து வருகிறது .

வெகு விரைவில் அங்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்ததாக படக் குழு சென்னை திரும்பும் என கணிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே போதை பொருளை மையமாக வைத்து தான் உருவாகி இருந்தது அந்த வகையில் லியோ திரைப்படமும் அப்படித்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது இதனால் இந்த படத்தில் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது.

அதற்கு ஏற்றார் போல லியோ படத்தில் விஜயுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய்தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பட குழு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் பணிபுரியும் ரத்னகுமார் ஏற்கனவே ஒரு கண்ணாடி துண்டை காட்டி  எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது அந்த கண்ணாடி துண்டை வைத்து பார்த்தால் ஏற்கனவே விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அது போன்ற ஒரு கண்ணாடியை தான் பயன்படுத்தியிருப்பார்.. அப்படி என்றால் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்

என்பதை தான் மறைமுகமாக சொல்ல வருகிறார் என கூறினார். தற்பொழுது ஒரு நாயுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார் இதை பார்த்து ரசிகர்கள் மாஸ்டர் படத்தில் பூனை என்றால் லியோ படத்தில் தளபதி விஜயின் செல்லப்பிராணி நாய் என பலரும் கேட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்..

leo
leo

Leave a Comment