தற்பொழுது தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ் இவருடைய இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் மிகப்பெரிய வசூல் சாதனையை ஈட்டி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது பிரபல விமர்சகர் ஒருவர் கண்டிப்பாக லியோ படம் 850 கோடி வசூல் செய்துவிடும் எனவும் ஆனாலும் லோகேஷ் கனகராஜ் 1000 கோடிக்கு குறி வைத்திருப்பதாகவும் கூறியுள்ள பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது வருகிறது. இந்த படத்திற்கு முன்பு இவர்களுடைய கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்த நிலையில் தற்போது லியோ திரைப்படம் அதனை விட மாசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடித்து வருகிறார். மேலும் இவரை தொடர்ந்து த்ரிஷா, மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், அர்ஜூன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் லியோ படத்தின் சேட்டிலைட் உரிமம், ஓடிடி போன்றவைக்கு தற்பொழுதே நல்ல விலை போயிருக்கும் நிலையில் கண்டிப்பாக இந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த விமர்சகர் செயர் பாலு கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது தெலுங்கு திரைவுலகில் இருந்து தமிழில் வெளியான பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற திரைப்படங்கள் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டது. எனவே லியோ படமும் கிட்டத்தட்ட 850 கோடி வசூல் செய்யும் ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் நல்ல மார்க்கெட்டிங் தெரிந்தவர் என கூறி இருக்கிறார்.