லியோ LCU-வில் தான் இணைகிறது .! விக்ரம் படத்தில் இதை கவன்த்தீர்களா.?

0
leo
leo

நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி நடை போட்டு வருகிறது இந்த திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய போகிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். பல நாட்களாக தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் கொந்தளித்து வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தளபதி 67 திரைப்பட அப்டேட்டை வெளியிட்டு இருந்தார்.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அப்டேட் முதலில் வெளியானது. விஜயுடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கலே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது.

இதனை தொடர்ந்து அடுத்த ஒரு இரு நாட்களில் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் ப்ரமோ ஒன்று வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார் அந்த வகையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படத்திற்கு லியோ என்றும் டைட்டில் வைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து லியோ திரைப்படம் தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைய போகிறதா இல்லையா என்ற குழப்பம் பலருக்கும் இருந்தாலும் ரசிகர்கள் இது முழுக்க முழுக்க எல்சியு திரைப்படம் தான் என்று கூறி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் விக்ரம் திரைப்படத்தில் லியோ குறிப்பு ஒன்று இருப்பதாகவும் அந்த காட்சியை மட்டும் தற்போது வைரல் ஆக்கி வருகிறார்கள். அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் செம்பன் வினோத் அவர்கள் ஒரு காட்சியில் அமர் எனக்கு காஷ்மீரில் நடந்த ஒரு கேஸ் மூலமாக தான் தெரியும் என கூறியிருந்தார்.

இந்த காட்சியை மட்டும் தற்போது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தான் நடந்து வருகிறது அதனால் லியோ திரைப்படமும் எல்சியு சார்ந்த திரைப்படமாக தான் உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது.