லியோ LCU-வில் இணைகிறது, அப்டேட் கொடுத்த பிரபலம்.! உற்சாகத்தில் ரசிகர்கள்…

விஜயின் 67வது திரைப்படமான லியோ திரைப்படம் தற்போது காஷ்மீரில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கான அப்டேட் சமீப காலங்களாக வெளியாகி கொண்டே வருகிறது. அந்த வகையில் லியோ திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அப்டேட்டை படகுழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் லியோ திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவன் மேனன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படி அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் தற்போது பிரபலம் ஒருவர் லியோ திரைப்படம் LCU-வில் இணைகிறது என்று ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார் இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது பல திரைப்படங்கலில் நடன ஆசிரியராக இருந்த பிரபலமானவர் சாண்டி மாஸ்டர் இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் லியோ படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார் அதாவது தற்போது இந்த படத்தில் நான் நடித்து வருகிறேன் ஆனால் இதுவரைக்கும் லியோ திரைப்படம் LCU-வில் இணைகிறதா என்ற தகவல் எனக்கு கிடைக்கவில்லை விரைவில் LCU சம்பந்தமான அப்டேட்டுகள் வெளியாகி விடும் என்று கூறியிருந்தார் இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தில் லியோ திரைப்படம் குறித்த சில தகவல்களை வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் காஷ்மீரை குறித்து கூறியிருப்பார்கள் அதை தற்போது ரசிகர்கள் கண்டுபிடித்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் விக்ரம் திரைப்படத்தின் தொடர்கதை தான் லியோ என்று கூறியும் வருகிறார்கள் இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது ஏனென்றால் விக்ரம் திரைப்படம் ஆல்ரெடி LCU-வில் இணைந்து இருக்கிறது இதன் தொடர்கதையாக இருந்தால் லியோ திரைப்படமும் LCU-வில் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version