லியோ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.! எதிர்பார்ப்பை கிளப்பிய புதிய தகவல்…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் கடைசியாக வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்ச்சனத்தை பெற்றது. இணைந்து தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்ற நிலையில் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டப்பட்டு படபிடிப்பை கொடைக்கானலில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான அப்டேட்டுகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த வகையில் லியோ திரைப்படத்தில் யாரெல்லாம் நடிகர்கள் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது அந்த வகையில் விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் பலமில்லியன் யார்வையாலர்களை கடந்தது.  இதனை தொடர்ந்து அடுத்தடுத்து சில தகவல்கள் லியோ திரைப்படத்திலிருந்து வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

அதாவது பிரபல இயக்குனர் ரத்னகுமார் அவர்கள் சமீபத்தில் லியோ திரைப்படத்திலிருந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார் அதாவது நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு லியோ திரைப்படம் இருக்காது நீங்கள் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக தான் இருக்கும் ஆகையால் விஜய் ரசிகர்கள் அனைவரும் லியோ படத்தின் எதிர்பார்ப்பை கொஞ்சம் அதிகமாகவே வைத்திருங்கள் என்று கூறி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் கமல் அவர்கள் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது இதனை தொடர்ந்து ரத்னகுமார் அவர்கள் தெரிவித்தது லியோ படத்தில் விஜய் மற்றும் கமல் இருவரும் நடிக்கக்கூடிய காட்சி மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதனால் லியோ படத்தில் கமல் இருப்பது உறுதியாகி விட்டது.

அது மட்டுமல்லாமல் லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைகிறது என்று கூறி வந்தனர் அந்த வகையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக ரத்னகுமார் அவர்கள் வெளியிட்ட அப்டேட் ரசிகர்கள் மத்தியில் தியாக பரவி வருகிறது.

Leave a Comment