தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இதனை அடுத்து தற்பொழுது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் தற்போது இவர்களின் இரண்டாவது முறை கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.
ஏனென்றால் இந்த படத்தில் தொடர்ந்து ஏராளமான முக்கிய பிரபலங்கள் இணைந்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ஏராளமான பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வில்லன் நடிகர் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறாரார். மேலும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வரும் நிலையில் ஜனவரி மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தற்பொழுது வில்லன் நடிகர் மதுசூதனன் ராவ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லியோ படத்தின் காஷ்மீர் பரப்பிடிப்பு வருகின்ற மார்ச் 24ஆம் தேதி நிறைவு பெற உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து விரைவில் தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.