தலைக்கு வந்த கத்தி நல்லவேளை தலப்பாவோட போச்சு.. லியோ இதோ முழு திரைவிமர்சனம்.!

Leo movie full review : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி இன்று  உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. மேலும் படத்திற்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை.

ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் சஞ்சய் அதேபோல் ஹெரால்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் அர்ஜுன் இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்கள் இருவரும் சட்டவிரோதமாக பல போதைப் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள் உலகைப் பொறுத்தவரை மிகப் பெரிய ட்ரக்ஸ் மாபியா இவர்கள்தான் ஆண்டனி தாஸ் இன் மகன்தான் விஜய்.

இவர்தான் போதை பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி வைப்பார் அந்த வகையில் திடீரென போதை பொருளை பதிக்க வைத்திருந்த பேட்டரி தீ பிடிக்கிறது இந்த விபத்தில் லியோ இறந்து விடுகிறார். இந்த சம்பவம் நடந்து முடிந்த 20 ஆண்டுகாலம் ஆகிறது.

அதன் பிறகு பார்த்திபன் என்ற விஜய்யை பார்க்கிறார்கள் ஒருவேளை இவர் தான் லியோவா என சந்தேகம் வருகிறது தாஸ் சகோதரர்கள் அனைவருக்கும் லியோ சாகவில்லை என்று முடிவு செய்து பார்த்திபனாக இருக்கும் விஜய்யை துரத்த ஆரம்பிக்கிறார்கள் ஒருவேளை லியோ தான் பார்த்திபனா அல்லது இரண்டு பேரும் வேறு வேறு ஆளா என்பது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தெரிய வரும்.

என்னதான் லியோ திரைப்படத்தில் எத்தனையோ நடிகர்கள் நடித்திருந்தாலும் ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதும் தாங்கி நிற்கிறார் விஜய் பார்த்திபனாக தன்னுடைய எமோஷனளான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் படத்தில் எத்தனையோ மைனஸ்கள் இருந்தாலும் அதனை அனைத்தையும் சரி கட்டி வைத்து விடுகிறார் தளபதி விஜய்.

தாஸாக தன்னுடைய மொத்த நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார் அது மட்டும் இல்லாமல் தந்தை கணவர் என்ற இரண்டு கேரக்டரில் விஜயின்  நடிப்பு மிகவும்சிறப்பாக இருந்தது மாஸ் ஹீரோவாக நடித்துள்ள விஜய்க்கு வில்லன் கதாபாத்திரம் சரியான கதாபாத்திரம் அமையவில்லை என்னதான் அர்ஜுன் நடித்திருந்தாலும் பெரிதாக படம் முழுவதும் அவர்கள் வரவில்லை.

லோகேஷ் முதன்முறையாக ஆக்ஷன் உடன் குடும்ப செண்டிமெண்ட்டை கையில் எடுத்துள்ளார் இது அவருக்கு மைனஸ் ஆக அமைந்துவிட்டது திடீரென குடும்ப செண்டிமெண்ட் உள்ளே வந்ததால் அவரின் சாயல் குறைந்து விடுகிறது. என்னதான் பல வில்லன்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் ஆனால் பறக்கவில்லை ஆனால் அனிருத் இசை இரண்டாவது பாதியில் உச்சத்தை தொட்டிருந்தது.

படம் துவங்கியதும் அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என ரசிகர்கள் யூகித்து விடும் படி இந்த திரைப்படத்தை கொடுத்துள்ளார் லோகேஷ் . மீண்டும் த்ரிஷாவை விஜய்யுடன் திரையில் பார்த்தது ரசிகர்களுக்கு சந்தோசம் தான் அதுமட்டுமில்லாமல் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், என அவர் அவர்கள் கதாபாத்திரத்தை ஏற்று கச்சிதமாக நடித்துள்ளார்கள்.