லியோ முதல் பாதி சும்மா நெருப்பு மாதிரி இருக்கு.! வைரலாகும் விமர்சனம்

leo first half twitter review : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது மேலும் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது படத்தில் விஜய் உடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய், சாண்டி மாஸ்டர், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், அர்ஜுன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது மேலும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது. ரோகிணி திரையரங்கில் முதலில் திரைப்படம் திரையிடப்பட மாட்டாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது பிறகு தயாரிப்பாளர் திரையரங்க உரிமையாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியாக சுமூக முடிவை கொண்டு வந்தார்கள்.

சமீபத்தில் வெளியாகிய லியோ திரைப்படத்தின் டிரைலர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் படம் ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கும் என அப்பொழுதே கணித்து விட்டார்கள் தமிழ்நாட்டைத் தவிர மத்த மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் அனுமதி கொடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்த நிலையில் தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் திரைப்படத்தை காண திரையரங்கமே  திருவிழா போல் கூட்டம் குவிந்து கொண்டிருக்கிறது. பேனர்கள் பட்டாசுகள் என அமர்க்களப்படுத்தி வருகிறார்கள் இந்த நிலையில் திரைப்படத்தை பார்த்த பிரபலம் முதல் பாதி  எப்படி இருக்கிறது என விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது லியோ முதல் பாதி தீ மாதிரி இருக்கு ஆக்சன் பிளாக் சண்டை காட்சிகள் வெறித்தனமாக இருக்கு அன்பறிவு மாஸ்டர் மிரட்டி விட்டார் அனிருத் இசை பிரம்மாண்டமாக இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் சாதித்து விட்டார் எனவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.