இணையத்தில் லீக்கான லியோ படத்தின் மியூசிக்.? யார் பார்த்த வேலைடா இது.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டுகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சமீப காலங்களாக தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் இணையதளத்தில் ஆர்ப்பாட்டம் செய்யாத ஒரு குறையாக கேட்டு வந்தனர்.

அது மட்டுமல்ல இயக்குனர் லோகேஷ் ரசிகர்களுக்கு இணங்க தன்னுடைய பாணியில் ஒரு அப்டேட்டை வெளியிட்டு வந்தார் அது மட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் டீசரையும் வெளியிட்டிருந்தார் அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்கு லியோ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் இந்த படமும் ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வாசூல் பெரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அப்டேட் வெளியாகி இருந்தது அந்த வகையில் லியோ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து அடிக்கடி தளபதி 67 திரைப்படத்திலிருந்து பல தகவல்கள் வெளியாகி இருந்தாலும் அது எதுவும் உண்மையான தகவலாக வெளியாகவில்லை இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது லியோ படத்திற்கு இசையமைக்கும் அனிருத் அவர்கள் இந்த படத்தின் டீசர் வீடியோவிற்காக தீயாக வேலை செய்யும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதை பார்த்த தளபதி ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். ஏனென்றால் நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளியான வாரிசு படம் வெளி வருவதற்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகியது இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அந்த வகையில் தற்போது லியோ படுத்தியதாக ஒரு மாசான மியூசிக் போட்டுக் கொண்டிருக்கும் அனிருத்தின் வீடியோ தற்போது இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த தளபதி ரசிகர்கள் இதை யார் பார்த்த வேலைடா என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment