டைட்டில் வீடியோவை வெளியிட்டு பல நூறு கோடி காசு பார்த்த லியோ.. படம் வெளிவந்தால் அந்த சாதனையை முறியடிக்கும்

தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது விஜயுடன் இணைந்து “லியோ” திரைப்படத்தை இரவு, பகல் பார்க்காமல் விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். இந்த படமும் போதை பொருளை மையமாக வைத்து தான் கதை நகரும் என தெரிய வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே படக்குழு படத்தின் டைட்டில் கார்டில் அதை தெளிவுப்படுத்தியது.

லியோ படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் வெற்றிகரமாக முடித்ததை அடுத்து 180 பேருடன் படக்குழு உடனடியாக காஷ்மீர் பறந்தது. அங்கு மைனஸ் டிகிரி குளிர் என்று கூட பார்க்காமல் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் விஜய் உடன் சேர்ந்து அர்ஜுன், ப்ரியா ஆனந்த், திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின்..

மற்றும் மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிக் பாஸ் ஜனனி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் காட்சிகள் மட்டும் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி இருந்தாலும் அவ்வபோது புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கிறது.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. ரசிகர்கள் எப்படி இந்த படத்தை பார்க்க ஆவளுடன் இருகிறார்களோ அதே போல வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. இதுவரை மட்டுமே லியோ படம் ப்ரீ பிசினஸில் மட்டும் 400 கோடியை தாண்டி உள்ளது. இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமை சன் நெட்வொர்க்கும், OTT ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் பெற்று உள்ளது.

மேலும் தியேட்டர் ரைட்ஸ் மட்டுமே 125 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் சேட்டிலைட் டிஜிட்டல், மியூசிக் ஆகியவை 240 கோடிக்கு மேல் விற்பனையாக உள்ளது இதன் மூலமே பல கோடி லாபம் பார்த்துள்ளது லியோ படக்குழு.. இதுவே இப்படி என்றால் படம் வெளிவந்து நிச்சயம் 1000 கோடி வசூல் செய்யும் என பலரும் சொல்லி வருகின்றனர். குறிப்பாக பதான் படத்தின் வசூலை லியோ முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment