கடும் குளிரில் மாட்டிக்கொண்ட “லியோ” படக்குழு.. காஷ்மீரில் எத்தனை டிகிரி தெரியுமா.?

லோகேஷ் கனகராஜ் வித்தியாசமான கதைகளை சூப்பராக கையாளுகிறார் அதன் காரணமாக அவரது படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கின்றன. கடைசியாக வெளிவந்த விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இப்போ “லியோ” திரைப்படத்தை லோகேஷ் காஷ்மீரில் வைத்து எடுத்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. விஜய் இணைந்து மன்சூர் அலிகான், கௌதம் மேனன்,மிஸ்கின், சஞ்சய் தத் என மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே விஜயை எதிர்த்து  இந்த படத்தில் சண்டை போடும் என தெரிய வருகிறது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

மேலும் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் மற்றும் திரிஷா போன்றவர்களும் ஹீரோயின்னாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் லியோ படத்தை  உடனடியாக எடுக்க லோகேஷ் கனகராஜ் படக்குழுவை அழைத்துக் கொண்டு காஷ்மீர் சென்றுள்ளார் அங்கு தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

ஆனால் அங்கேயும் தற்பொழுது சிக்கல் வந்துள்ளது அதாவது காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது வருகிறது அங்கு வெறும் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தான் காணப்படுகிறது. இன்னும் ஒரு மாத காலம் படக்குழு அங்கே தான் படப்பிடிப்பை நடத்தும் என கூறப்படுகிறது.

ஒரு வாரம், ரெண்டு வாரம் என்றால் கூட சமாளித்து விடலாம் ஒரு மாத காலம் அந்த கடும் குளிரில் படப்பிடிப்பு எடுப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல நிச்சயம் ஒரு சில நடிகர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்து இருந்து பாப்போம் என்ன வேண்டுமாலும் நடக்கும்..

Leave a Comment