நிலநடுக்கத்தால் பதறிப்போன லியோ படக்குழு.! தயாரிப்பாளர் கூறிய தகவல்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வருகின்ற ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இதற்காக படக்குழுவினர்கள் கடுமையாக உழைத்து வரும் நிலையில் முழு வீசியவுடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகளை தொடங்க படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் வட மாநிலங்களில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் நிலநடுக்கத்தால் வீதி அடைந்து உள்ளனர்.

அதாவது 49 நொடிகள் 1 நிமிடம் வரை இந்த நில அதிர்வு இருந்ததாக மக்களால் உணரப்பட்டிருக்கும் நிலையில் பலரும் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்கி வருகிறார்கள். அந்த வகையில் லியோ பட குழு தங்கி இருக்கும் ஹோட்டல் அறையிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட அனைவரும் பதறிப் போய் உள்ளனர்.

முதலில் பலத்த காற்று வீச அதன் பிறகு அதிர்வு உண்டாகி இருப்பது என அனைவரையும் உணர்ந்துள்ளார்கள் எனவே நிலநடுக்கம் என்று தெரிந்து கொண்ட நிலையில் பதறிப் போய் அனைவரும் விரைந்து ஹோட்டல் அறையிலிருந்து கீழ்த்தலத்திற்கு வந்திருக்கிறார்கள். எனவே இது குறித்து பதட்டமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் தளபதிக்கு என்ன ஆச்சு என்றும் படக் குழுவினர்கள் எப்படி இருக்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.

எனவே தயாரிப்பாளர் அனைவரும் நலமுடன் இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவுவிட்டுள்ளார். காஷ்மீர் குளிரால் படக்குழு மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள் இருந்தாலும் கஷ்டப்பட்டு ஷூட்டிங்கை லோகேஷ் கனகராஜ் முடித்துள்ளார் எனவே லியோ டீம் திட்டமிட்டபடி காஷ்மீரின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு இன்னும் சில வாரங்களில் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment