சந்திரமுகி 2 ரிலீஸ் ஆனாலும் குறையாத வைப் .. வெளியானது லியோ தாஸ் Badaas ப்ரோமோ வீடியோ.

Leo update: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் கிளிப்ஸ் சமீபத்தில் வெளியாகி உள்ளது. லியோ படம் பான் இந்திய படமாக உருவாகி இருப்பதனால் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் பிரம்மாண்டமாக  இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே லியோ படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடர்ந்து உள்ளது.

இதனை அடுத்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 68வது படத்தில் நடிப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். லியோ படம் ரிலீஸ்க்கு பிறகு தளபதி 68 படத்தின் சூட்டிங் தொடர இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 28ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கள் ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது.

அனிருத் இசையமைக்க விஜய், அனிருத், அசல் கோளாறு ஆகியவர்கள் இணைந்து பாடியுள்ளனர். மேலும் இந்த பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். நான் ரெடி பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் கலைக்கட்டியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.

இதனை அடுத்து நேற்று லீலோ படக் குழு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்பதை தெரிவித்துள்ளனர் இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் லியோ படத்தின் இரண்டாவது பாடலான படாஸ் எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளனர். அந்த ப்ரோமோ வீடியோ தற்பொழுது வெளியிட்டுள்ளது முதல் பாடலை எழுதிய விஷ்ணு எவடன்தான் இந்த பாடலையும் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் வாய்ஸில்  உருவாகி இருக்கும் இந்த பாடலை சோசியல் மீடியாவில் விஜய்யின் ரசிகர்கள் ட்ரெண்டிங்காகி வருகிறார்கள். இவ்வாறு இதனால் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு புறம் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்தை தான் ஏற்படுத்தி உள்ளது.