ஆல் ஏரியாவில் அண்ணன் கில்லி என்பதை நிரூபித்த விஜய்.. லியோ 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Leo box office collection day 4: கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ஆயுத பூஜையை முன்னிட்டு விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி தாறுமாறாக வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. நேற்று மாலை தயாரிப்பு நிறுவனம் இண்டஸ்ட்ரி ஹிட் என்று அறிவித்த நிலையில் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

கலவை விமர்சனம் கிடைத்தாலும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிக வசூல் செய்த வாரிசு, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களின் வசூலை முறியடித்து இருக்கிறது. அப்படி ரஜினியின் ஜெயிலர் பட வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த சூழலில் தற்பொழுது 4வது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 4வது நாளான ஞாயிற்றுக்கிழமை விஜய் நடித்த லியோ திரைப்படம் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டி இருக்கிறதாம். அந்த வகையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொஞ்சம் கூட குறையாமல் தொடர்ந்து திரையரங்குகளில் கூட்டங்கள் அலைமோதி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து 4வது நாளில் இந்தியாவில் மொத்தம் 179 கோடி வசூல் செய்து 200 கோடி வசூலை நோக்கி லியோ சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் லியோ படம் 100 கோடிக்கு மேல் வசூலை தாண்டி இருக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. கலவை விமர்சனம் கிடைத்தாலும் நடிகர் விஜய்க்காக ரசிகர்கள் தொடர்ந்து லியோ படத்திற்கு தங்களுடைய ஆதரவை தந்து வருகின்றனர்.

3 நாட்களில் 305 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் உலகம் முழுவதும் 4வது நாளில் அதிகபட்சமாக 90 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறதாம். அதன்படி தற்பொழுது வரையிலும் 390 முதல் 395 கோடி வரை வசூல் செய்திருக்கும் லியோ இனிவரும் நாட்கள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை என்பதால் கண்டிப்பாக விடுமுறை நாட்களில் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.