தலைவா, நாம பயந்து ஒதுங்குரமா இல்ல பாயப் பதுங்குரோமா.? ரசிகரின் கேள்விக்கு லியோ ஸ்டைலில் எக்ஸ் தளத்தில் பதிலளித்த விஜய்.!

Leo audio launch : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் லியோ, இதற்கு முன்பு லோகேஷ் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.

படம் ரிலீஸ் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்களை பட குழு வெளியிட்டு வந்தது மேலும் ஆடியோ லான்ச் மிகவும் பிரமாண்டமாக நடத்த நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது விரைவில் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை ரசிகர்களுக்கு அந்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகிறது.

அதாவது லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என பட குழு முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்தார்கள் அதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு பட தொடர்பான அப்டேட்களை வெளியிட இருப்பதாகவும் கூறி இருந்தார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த முடிவிற்கு எந்த ஒரு அரசியல் பின்னணியும் தலையிடும் கிடையாது எனவும் தயாரிப்பு தரப்பில் இருந்து தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் எதற்காக இந்த திடீர் முடிவு என ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழும்புகிறது விஜய் இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக குட்டி ஸ்டோரி சொல்லுவார் என எதிர்பார்த்துக் கொண்ட அந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இதன் நிலையில் நடிகர் விஜயின் பழைய பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அதாவது இந்த பதிவு 2014 ஆம் ஆண்டு எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் விஜய் இடம் தலைவா, நாம பயந்து ஒதுங்குரமா, இல்ல பாய பதுங்குரோமா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தளபதி விஜய் அவர்களும் பயமும் இல்லை பதுங்கவும் இல்லை அனுபவம் தேடுகிறோம் அவ்வளவுதான் என பதில் அளித்துள்ளார் இந்த பதிவு தற்பொழுது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

thalapathy leo
thalapathy leo