லியோ இசை வெளியீட்டு தேதியை அறிவித்த பட குழு.! குஷியில் இருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.!

leo audio launch
leo audio launch

Leo audio Launch : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் விஜயுடன் இணைந்து திரிஷா, மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன்,  கௌதம் வாசுதேவ் மேனன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது ரசிகர்களிடம்.

இந்த நிலையில் தற்பொழுது லியோ திரைப்படத்திலிருந்து ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ஒரு துப்பாக்கியில் விஜயின் முகம் பதிக்கப்பட்டிருந்தது இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலானது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் ஆடியோ லான்ச் எப்பொழுது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக விஜய் ஏதாவது குட்டி ஸ்டோரி கூறுவர் என விஜயின் தம்பிகளான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

leo music
leo music

இந்த நிலையில் லியோ ஆடியோ லான்ச் தேதியை பட குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி இசை வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்த பட குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தான் விழா நடைபெற இருக்கிறது.

இதற்கு சில கட்டுப்பாடுகள் விஜய் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள், இதில் விஜய் மக்கள் இயக்கம் முக்கிய நிர்வாகிகள் மாவட்டத்திற்கு 200 நபர்கள் மட்டுமே அழைப்பு என புஸ்சி ஆனந்த் அறிவித்துள்ளார். . அதுமட்டுமில்லாமல் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் செய்யாமல் சொந்த வாகனங்களில் விழாவிற்கு வந்து ரசிகர்கள் பங்கேற்கலாம்.

அதுமட்டுமில்லாமல் விழா அரங்கின் வெளியே பேனர்கள் வைக்க தடை விதிக்கபட்டுள்ளது உரிய அனுமதி பெற்றால் மட்டுமே பேனர் வைக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. இப்படி லியோ இசை வெளியீட்டு விழாவிற்கு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளார்கள்.