Leo : துள்ளி குதித்துக் கொண்டிருந்த “விஜய்” ரசிகர்களுக்கு துக்க செய்தி.. இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Leo Audio Launch Cancel : தமிழ் சினிமாவில் இன்று டாப் ஹீரோவாக வலம் வருவர் தளபதி விஜய். இவர் லியோ படத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன்,  பிரியா ஆனந்த், த்ரிஷா, அர்ஜுன், சாண்டி மாஸ்டர்  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

படம் முழுக்க முழுக்க மிகப்பெரிய ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது.  வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாகவே ரசிகர்களை சந்தோஷப்படுத்த லியோ டீம் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு வந்த நிலையில் அடுத்ததாக இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருந்தனர்.

செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருந்தது. நிகழ்ச்சி பெரிய அளவில் நடத்தப்படும் விஜய் குட்டி கதை இருக்கும் என ரசிகர்கள் கணக்கு போட்டு காத்துக் கொண்டிருந்தனர்.

இன்னும் சில தினங்கள் தான் என கூறிவந்த நிலையில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அதில் சொல்லு உள்ளது என்னவென்றால்..  லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளதாகவும் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இந்த முடிவுக்கு பின்னால் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட வேறு எந்த காரணங்களும் இல்லை என கூறியுள்ளது. இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது விஷயத்தை கேள்விப்பட்ட தளபதி ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்..