லியோ படத்தில் இணைந்த லெஜன்ட் சரவணன்.! வைரலாகும் வீடியோ…

leo
leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் லெஜன்ட் சரவணன் அண்ணாச்சி அவர்கள் இணைந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் லெஜன்ட் சரவணன் வீடியோவும் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது பட குழுவினரின் தாய் ஒருவர் உயிரிழந்ததால் படக்குழுவினர் சென்னை திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படக்குழு ஒரு பக்கம் சென்றிருக்க நடிகை திரிஷா அவர்கள் காஷ்மீரில் ஜாலியாக இருந்து வரும் புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் படகுழுவை சேர்ந்த ஒருவர் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி உபயோகப்படுத்திய கண்ணாடியை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இதனால் விஜய் சேதுபதியும் லியோ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமல்லாமல் லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைய இருப்பது பல தகவல்களால் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த், உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவர்களைத் தொடர்ந்து இந்த லியோ திரைப்படத்தில் கமல் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அதாவது லியோ திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் கமல் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒரு சில தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்த நிலையில் சரவணன் அண்ணாச்சி அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சரவணன் அண்ணாச்சி லியோ படத்தில் நடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் சரவணன் அண்ணாச்சி காஷ்மீரில் இருப்பது உண்மை ஆனால் அவர் லியோ படத்தில் நடிப்பதற்காக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.