அட சத்தியமா இது லெஜண்ட் அண்ணாச்சி தான்.! குழந்தைகள் முன் கொடுத்த அப்டேட், வைரலாகும் போட்டோ

Legend Annachi : சரவணா ஸ்டோர்ஸ் என்ற சாம்ராஜ்யத்தை கட்டிக் காத்து வரும் லெஜன்ட் அண்ணாச்சி இப்போது சினிமா துறையிலும் களம் இறங்கியுள்ளார். தி லெஜன்ட் படம் மூலம் தன்னுடைய அஸ்திவாரத்தை போட்ட இவர் தற்போது தன் அடுத்த பட அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.

விளம்பர படங்களில் நடிக்கும் போதே ட்ரோல் செய்யப்பட்ட இவர் ஹீரோவாக களம் இறங்கியது சோசியல் மீடியா மீம் கிரியேட்டர்களுக்கு நல்ல சான்ஸ் ஆக மாறியது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அண்ணாச்சி கோடிகளை வாரி இறைத்து தன் படத்தை வெளியிட்டார்.

அதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஏனென்றால் பிடிக்குதோ இல்லையோ அண்ணாச்சியின் படத்தை பார்த்து இரண்டரை மணி நேரம் கலகலப்பாக சிரிக்கலாம் என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.

legend1
legend1

அதனாலேயே அவருடைய அடுத்த படத்தை பலரும் எதிர்பார்த்தனர். அதன் பலனாக சுதந்திர தினமான இன்று குழந்தைகளின் முன்பாக தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போது தன்னுடைய தோற்றத்தை வேற லெவலில் மாற்றி இருக்கும் அண்ணாச்சி கலக்கலான உடை, மேக்கப் சகிதமாக குழந்தைகளின் முன்பு ஆஜரான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் குழந்தைகள் இவருடைய அடுத்த பட அப்டேட்டை கேட்கின்றனர். உடனே அண்ணாச்சி இப்பொழுதுதான் நல்ல கதை ஒன்று கிடைத்திருக்கிறது. இதற்காகத்தான் காத்திருந்தேன், கூடிய விரைவில் படத்தை எடுத்து வெளியிடுவேன் என்ற அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் நான் எதற்கும் சோர்ந்து விட மாட்டேன் இனிமேல் தான் என்னுடைய ஆட்டமே இருக்கிறது என்று அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார். அந்த வீடியோவும், போட்டோக்களும் இப்போது சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

legend-saravanan
legend-saravanan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment