தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஹீரோக்களின் திரைப்படங்கள் பெருமளவு எதிர்பார்ப்பு இருக்காது அது மட்டுமில்லாமல் புரமோஷன் கூட சொல்லும்படி பெரிய அளவில் இருக்க வாய்ப்பு கிடையாது அந்த வகையில் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை விட அதிக அளவு எதிர்பார்ப்புடன் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடித்துள்ள லெஜெண்ட் திரைப்படம்.
இவ்வாறு உருவான என்ற திரைப்படம் எப்படி இருக்கும் எப்படிப்பட்ட கதாபாத்திரம் நமது அண்ணாச்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தினை ஜேடி ஜெர்ரி என்ற இயக்குனர்கள் இயக்கியது மட்டுமில்லாமல் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆகிய இரண்டுமே ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இதில் பல்வேறு திரை பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளார்களாம்
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது குறித்து ஒரு லிஸ்ட் வெளியாகியுள்ளது அதில் 10 ஹீரோயின்கள் கலந்து கொள்ள போவதாகவும் அதில் 5 பேர் அண்ணாச்சியின் இடது பக்கமும் ஐந்து பேர் அண்ணாச்சியின் வலது பக்கமும் நிற்கும் படி போஸ் கொடுத்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் அதில் இருக்கும் நடிகைகள் யார் யார் என்றால் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ஊர்வசி ரௌடெல, யாஷிகா ஆனந்த், ராய் லட்சுமி, சாத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ லீலா, நுபூர் சனொன், டிப்பில் ஹயத்தி ஆகிய பிரபல நடிகைகள் கலந்து கொள்வது மட்டும் இல்லாமல் இந்த விழாவில் அனுமதி பெற்ற பிரபலங்கள் மட்டுமே அனுமதிக்க உள்ளார்களாம்.


