தல அஜித்துனா சும்மாவா..! “வலிமை” படத்தின் பெயரைப் பயன்படுத்தும் தேர்தல் ஆணையம்.! புகைப்படத்தை இணையதள பக்கத்தில் தேடிப்பார்க்கும் தல ரசிகர்கள்.

தல அஜித் தமிழ் சினிமாவின் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்தார் என்றால் அதைத் தக்கவைத்துக்கொள்ள சினிமாவையும் தாண்டி தனது தனித்துவமான திறமையை வெளிக்காட்டி அதை தக்கவைத்துக் கொண்தோடு மட்டுமில்லாமல் முன்னேறியும் செல்கிறார்.

இதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிக் கொண்டே வருகின்றன மேலும் அஜித்திற்கு நல்ல பெயர் கிடைத்துக்கொண்டே செல்கின்றன.

அரசியல்வாதி தொடங்கி சாதாரண மனிதர் வரை புரிந்து கொள்ள முடிகிறது.

அஜித் “வலிமை” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடித்துவிட்டு கையோடு துப்பாக்கி சுடுதலில் மிக தீவிரமாக ஆர்வம் காட்டி வந்தார் அதன் விளைவாகவே தற்போது அவர்களுக்கு 4 தங்கம் 2 வெள்ளி கைபற்றி அசத்தினார்.

இதனால் தல ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர் இது ஒரு பக்கமிருக்க மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சட்டமன்ற தேர்தல் ஆணையம் அஜித்தின் வலிமை படத்தின் டைட்டிலை வைத்து விளம்பரத்தை உருவாக்கிக் கொண்டு உள்ளது.

இந்த நிலையில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிக சிறப்பாகவும் அதேசமயம் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையம் 100% விழுக்காடு வாக்களிக்க விளம்பரப்படுத்துவது வழக்கம் அந்த வகையில் வருகின்ற தேர்தலில் மக்கள் 100% வாக்களிக்க  விளம்பரங்களை சமூகவலைதள பக்கத்திலும், டிவி வரையிலும் ஒளிபரப்புகின்றனர்.

அந்த வகையில் தல அஜித்தின் வலிமை பட டைட்டிலை வைத்து தேர்தல் ஆணையம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment