ஜெயலலிதா மடியில் உட்கார்ந்து காபி குடித்த விஜய் டிவி தொகுப்பாளினி!! வைரலாகும் புகைப்படம்..

anchors-tv

விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தனது பேச்சுத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர்  தொகுப்பாளினி ரம்யா.  இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு தொகுப்பாளினியாக பிரபலமடைந்த இவர் ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, ஆடை உட்பட இன்னும் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் பிசியாக இருந்து வரும் ரம்யா சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ரம்யா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.புகைப்படத்தோடு இந்த நிகழ்வு எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக இருந்த எனது தந்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும் அப்போது எங்களையும் அவரை அழைத்து சென்றார்.

மேலும் ஜெயலலிதா ரம்யாவை பார்த்ததும் மடியில் தூக்கி வைத்து காபி கொடுத்தார் என்றும் ரம்யா கூறியுள்ளார். அவ்வபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

vj-ramya with jayalalitha
vj-ramya with jayalalitha
vj-ramya-2
vj-ramya-2