அன்புள்ள கில்லி என்ற திரைப்படத்திற்க்கு நாய்க்கு பின்னணி குரல் கொடுத்த பிரபல காமெடி நடிகர்!! பாராட்டும் திரைப்பிரபலங்கள்..

0

leading comedian actor dubbing voice given to dog in anpulla gilli movie: தமிழில் சமீபத்தில் நடிகர் நடிகைகள் டப்பிங் செய்து வெளியான தி லயன் கிங் என்ற திரைப்படத்தை தொடர்ந்து. தற்போது இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் அன்புள்ள கில்லி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடித்துள்ளது.

அந்த நாய்க்கு பின்னணிக் குரல் கொடுப்பது யார் என இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தீவிர ஆலோசனையில் இருந்தனர். ஒளிப்பதிவாளரின் பரிந்துரையின் பேரில் காமெடி நடிகர் சூரியை வைத்து நாய்க்கு குரல் கொடுக்க முடிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து இயக்குனர் சூரியிடம் பேசியபோது அவர் மறுப்பு தெரிவிக்காமல் நாய்க்கு குரல் கொடுக்க ஒப்புக் கொண்டார். மேலும் அவர் த லயன் கிங் போன்ற படங்களுக்கு பெரிய நடிகர், நடிகைகள் எல்லாம் குரல் கொடுக்கும் போது நம்ம ஊரு படங்களில் நடிக்கும் நாய்க்கு குரல் கொடுப்பதில் எந்தவித தவறும் இல்லை என அவர் கூறியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

soori061020_1

மேலும் அவருக்கே உரிய பாணியில் மிகவும் காமெடியுடன் அந்த நாய்க்கு குரல் கொடுத்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் எனவும் இயக்குனர் கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்த நாயிக்காக யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆண்ட்ரியாவும் டூயட் பாடல் ஒன்றை பாடி உள்ளனர் எனவும் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு படம் ரிலீசாகும் என இயக்குனர் கூறியுள்ளார்.

soori1