திடீரென சம்பளத்தை உயர்த்திய முன்னணி நடிகைகள் – முதல் இடத்தில் யார் தெரியுமா.?

சினிமா உலகில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் சினிமாவில் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்ட நடிகைகள் சிலர் தான்.

அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தா, பூஜா ஹெக்டே போன்றவர்கள் தொடர்ந்து நடித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழ் பக்கம் தாவினார் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பது வழக்கம்.

அதுவும் இல்லையென்றால் சோலோ படங்களில்  நடித்து வெற்றி கண்டு வருகிறார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களுடன் நடித்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.

இவரை தொடர்ந்து நடிகை சமந்தாவும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார் குறிப்பாக தமிழை தாண்டி தெலுங்கில் இவருக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகைகளாக இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்ட் வெளிவந்துள்ளது.

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளின் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஒரு திரைப்படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது இரண்டாவது இடத்தில் நடிகை  சமந்தா 3 லிருந்து  5 கோடி சம்பளம் வாங்குகிறார் மூன்றாவது இடத்தில்  பூஜா ஹெக்டே 5 கோடி. நான்காவது இடத்தில் ராஷ்மிகா மந்தனா 3 கோடி வாங்குகிறார்.

Leave a Comment

Exit mobile version