“வடிவேலுவுடன்” ஜோடி சேர முடியாது என கூறிய முன்னணி நடிகைகள்.? காரணம் இந்த நடிகர்களா.? சூப்பர் நியூஸ் இதோ.

0

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி பின் ஹீரோவாக வெற்றி நடை போட்டவர் வைகைபுயல் வடிவேலு. டாப் நடிகர்கள் படத்தில் காமெடியில் நடித்தாலும் ஒரு சில படங்களில் காமெடி மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார். அதனால் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்தனர்.

அதில் தனது திறமையை நிரூபித்தார் அதன் காரணமாக பல்வேறு படங்களில் அவருக்கு ஹீரோவாக வாய்ப்புகள் கிடைத்தது. அதில் நடித்து அசத்தினார் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் நல்ல வசூல் வேட்டையும் நன்றாக நடத்தியது அந்தவகையில் இருபத்தி மூன்றாம் புலிகேசி சூப்பர் டூப்பர் ஹிட் இந்த திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து அதன் பாகம்மாக 24ம் புலிகேசி என்ற படத்தை எடுக்கப்பட படக்குழு அதிகம் ஆர்வம் காட்டியது.

ஆனால் நடிகர் வடிவேலு சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த படம் எடுக்க முடியாமல் போனது அதன் பிறகு வடிவேலு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். ஒரு கட்டத்தில் அவர் சினிமாவில் நடிக்கக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு போட்டது. அதன் காரணமாக நான்கு வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் போனார். ஒருவழியாக சமீபத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டி அதிலிருந்து மீண்டு உள்ளார் நடிகர் வடிவேலு.

வந்தவுடனேயே லைகா தயாரிப்பில் கைகோர்த்து 5 திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் முதலில் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான பிரஸ்மீட் கூட சமீபத்தில் நடந்தது அதில் வடிவேலு சந்தித்து பேசினார் இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடி யார் என்பது குறித்து தீர்மானித்து வருகிறது படக்குழு.

பல நடிகைகளை வடிவேலுக்கு ஜோடியாக முதலில் முயற்சித்தது அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரிய பவானி சங்கர் இடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்  நாங்கள் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து உள்ளோம். அதனால் வடிவேலு உடன் நடிக்க முடியாது என மறைமுகமாக சொல்லி உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.