வயது நாற்பதை கடந்தாலும் முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் முன்னணி நடிகைகள்.! ஆனாலும் இன்னும் டாப்பு தான் இவங்க .!

0
tamil-actress
tamil-actress

தமிழ் சினிமாவில் சில நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வயது ஆனாலும் இன்னும் ஒண்டிக்கட்டை யாக சிங்கிளாக சுற்றி வருகிறார்கள். இதில் ஒரு சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் பட வாய்ப்புகள் பெரிதாக அமையாது என எண்ணி திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் தங்களுக்கு திருமணம் ஆனால் வயது தெரிந்துவிடும் என  திருமணத்தை ஏற்க மறுக்கிறார்கள்.

அந்த வகையில் வயது நாற்பதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிள் ஆக சுற்றி வரும் நடிகைகளை பற்றி இங்கே காணலாம்.

அனுஷ்கா- ஷெட்டி இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமிழ் தெலுங்கு என மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதிலும் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் மிகவும் பிரபலமானது. மேலும் இவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது இவருக்கு வயது 40 ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டுசிங்கிலாக சுற்றி வருகிறார்.

நக்மா- ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நக்மா அவர்களுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. நக்மா என்றாலே இளசுகளின் ஹார்ட் பீட் மிக வேகமாக துடிக்கும் அந்த அளவு நக்மா மீது கிரஷ்ஷாக இருந்துள்ளார்கள். நக்மா ரஜினி, பிரபு கார்த்திக் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும் நக்மா நடிப்பில் வெளியாகிய காதலன், மேட்டுக்குடி, பாஷா ஆகிய திரைப்படங்கள் மெகா ஹிட் ஆனது.

தற்பொழுது நக்மா அவர்கள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் தற்போது அவருக்கு வயது நாற்பத்தி ஏழு ஆகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இன்னும் சிங்கிளாக  சுற்றி வருகிறார்.

நடிகை கௌசல்யா-  தமிழ் சினிமாவில் தன்னுடைய அமைதியான நடிப்பால் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை கவுசல்யா நேருக்கு நேர், வானத்தைப்போல, சொல்லாமலே, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்து இருந்தார். சினிமா வாய்ப்பு போனாலும் சீரியலிலும் நடித்து வந்த இவருக்கு தற்போது 45 வயது ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகிறார்.

ஷோபனா- நடிகை சோபனா தென்னிந்திய சினிமாவில் நடிகையாக நடித்து வந்தவர் இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னடம் ,இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் பரதநாட்டியத்தில் அதிக ஆர்வம் உள்ளதால் இவர் பரதநாட்டிய கலைஞராக உருவெடுத்தார். மேலும் சினிமாவில் ரஜினி, விஜயகாந்த் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தற்பொழுது இவருக்கு 52 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.