தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த விட்டு அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழை விடவும் பாலிவுட்டில் முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழில் வெற்றிச் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். என்னதான் இவர் தமிழில் மூன்று திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. அதன்பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார்.
இந்த திரைப்படம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு சொல்லுமளவிற்கு தமிழில் திரைப்படம் நடிப்பதற்கான வாயப்புகள் கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இவர் முன்னணி நடிகையாக இருந்தாலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதோடு சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக கூறி புகார் அளித்திருந்தார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர் சமீப பேட்டி ஒன்றில் கூறிய தகவல் ஒன்று இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.அதாவது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனால் திருமணத்தின் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என்றும் கூறியிருந்தார்.

அதோடு நம்பிக்கை இல்லாமல் எதற்காக திருமணம் செய்து கொண்டீர்கள் என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்த வரை திருமணம் செய்து கொண்டால் எளிதில் விசா கிடைக்கும் என்பதால்தான் நான் திருமணம் செய்து கொண்டேன்விசாவிற்காக மட்டுமே நான் திருமணம் செய்து கொண்டேன் என்றும் என் கணவரை பார்க்க வேண்டுமென்றால் அதற்கான நேரம் வருகிற பொழுது அவரை வெளிநாட்டிற்குச் சென்று பார்ப்பேன் என்று கூறி உள்ளார். இவர் விசாவிற்காக மட்டும் தான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.