ஆமாம், நான் நாலு தடவை கல்யாணம் பண்ணுணா என்ன 40 தடவை பண்ணுனா என்ன கடுப்பில் விஜய் பட நடிகை.!

0

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு பல நடிகைகள் அறிமுகமாகி உள்ளார்கள்.  அந்த வகையில் அறிமுகமாகும் அனைத்து நடிகைகளுமே பிரபலமடைந்த விட முடியாது. ஆனால் இந்த நடிகை தனது விடா முயற்சியினாலும் அழகினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து பிரபலமடைந்தார்.

அதுமட்டுமல்லாமல் பிரபலமடைந்த சில நாட்களிலேயே கிடுகிடுவென பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், விஷால், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது மலையாளம், தெலுங்கு, தமிழ் மூன்று சினிமாவிலும் நடிப்பு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  அதுமட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் உள்ள பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முன்பெல்லாம் ஒரு நடிகையுடன் பேசவேண்டும் என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி கிடையாது அனைத்து நடிகைகளும் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் பேசுவது மற்றும் அவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிப்பது போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.

இதனால் ரசிகர்கள் மிகவும் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா மே என்று கேட்டதற்கு பிரபல நடிகை ஆத்திரமடைந்து. ஆமா, ஏற்கனவே நான்கு கல்யாணம் ஆயிடுச்சு போதுமா அதுக்கு என்ன இப்ப என்று மிகவும் கோபமாக பதில் அளித்துள்ளார்.

அந்த பிரபல நடிகை வேறு யாரும் இல்லை நம்ம கீர்த்தி சுரேஷ் தான். இவர் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் ஆனால் தனது உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக போனதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தள்ளாடி வருகிறார். இந்நிலையில் இவரின் மீது பல சர்ச்சையான விஷயங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அந்த வகையில் இவருக்கு திருமணமாகி விட்டது என்றும் மீண்டும் இவர் அனிருத்துடன் காதல் வயப்பட்டு உள்ளார் என்றும் சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே பட வாய்ப்புகள் கிடைக்காமல் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகிறார். இந்த நேரத்தில் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் ரசிகர்கள் கல்யாணம் ஆயிடுச்சா உங்களுக்கு என்று கேட்டது அவருக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.