தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காமல் பல நடிகைகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை நிக்கி கல்ராணி.
இவர் கன்னட சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அந்த வகையில் தமிழில் டார்லிங்,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு,மொட்ட சிவா கெட்ட சிவா, ஹர ஹர மகாதேவா, கலகலப்பு 2, கீ போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
ஆனால் தற்பொழுது இவர் பெரிதாக கவர்ச்சியை காட்டவில்லை என்பதால் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகிறார்கள். அந்த வகையில் இது குறித்து நிக்கி கல்ராணியிடம் கேட்கையில் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நான் அந்த மாதிரி கவர்ச்சியில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் யாகவராயினும் நாகாக்க மற்றும் மரகதநாணயம் ஆகிய படங்களில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படங்களில் நடிக்கும் போது இவர்களுக்கிடையே காதல் பற்றிக்கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்த வதந்திகளை உறுதி செய்யும் வகையில் நிக்கி கல்ராணி ஆதி உடன் பல இடங்களில் ஊர்சுற்றி வரும் புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறமிருக்க இவர் சமீபத்தில் மாதம் ஒரு லட்ச ரூபாய் தருவதாக கூறி என்னிடம் இருந்து 50 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு ஒருவர் ஏமாற்றிவிட்டார் என்று பெங்களூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த வகையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஹோட்டல் ஆரம்பிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு ஹோட்டலில் இருந்தபடி என்னிடம் 50 லட்ச ரூபாய் வாங்கினார். அவ்வபோது மாதம் மாதம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உங்களது கடனை அடைத்து விடுவதாக கூறி இருந்தார்.
ஆனால் அவர் மாத மாதம் ஒரு லட்ச ரூபாய் தரவில்லை எனது 50 லட்ச ரூபாயை தருவதாக கூறி ஏமாற்றி விட்டார்.எனவேஎன்னிடம் பணம் வாங்கிவிட்டு மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து என்னுடைய பணத்தை 50 லட்ச ரூபாயை வாங்கி தாருங்கள் என்று போலீசாரிடம் தகவல் புகார் அளித்துள்ளார்.