நான்காவுது முறையாக விஜயுடம் டூயட் பாடபோகும் பிரபல முன்னணி நடிகை..! யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரிபோட்டுடும்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் தற்போது தளபதி 66 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அவர்களும் நடித்து வருகிறார்.

தளபதி 66 முடிந்த உடனே தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்களை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் ஏற்கனவே 3 திரைப்படங்களில் நடித்து உள்ளார். அதுவும் கத்தி, மெர்சல், தெறி, போன்ற  திரைப்படங்களில் நடித்த சமந்தா அவர்கள் நான்காவதாக  விஜயுடன் இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

vijay
vijay

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சனங்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அடுத்ததாக தெலுங்கில் குஷி என்ற திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டா உடன் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் முடிந்த கையோடு அடுத்ததாக தளபதி 67 வது திரைப்படத்தில் நடிக்க தயாராகிறார். மாஸ்டர், விக்ரம் என அனிருத் இசையில் படத்தை இயக்கிக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67வது திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவை  இணைகிறார்.

மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைகின்றனர் என்ற உடன் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் இணைந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதேபோல் இந்த திரைப்படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment