15 வருடம் கழித்து தளபதி 67-ல் விஜய் உடன் இணையும் முன்னணி நடிகை.!

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக லாபம் பார்த்த வாரிசு திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

விஜய்யின் கடந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்கள் பெற்று வந்தாலும் தளபதி 67 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவர் இயக்கம் அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக அதிகமாக இருக்கிறது.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டதை தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தின் மூலம் இந்த கூட்டணி மறுபடியும் இணைந்து இருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாட்களில் இருந்து எந்த ஒரு அப்டேட் வெளியாகாமல் இருந்த நிலையில் நேற்று தளபதி 67 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தளபதி 67 திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், மன்சூர் அலிகான், உள்ளிட்ட பல நடிகர்களை அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று பாதி அப்டேட்டை மட்டும் வெளியிட்ட பட குழுவினர் இன்று மீதி அப்டேட்டை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

அந்த வகையில் இன்று யார் யாரை அறிவிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதாவது இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகும் நடிகை திரிஷாவை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் பணியாற்றும் பட குழுவினரையும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் தளபதி 67 படத்தின் அடுத்த அப்டேட் வந்து விட்டது. ஆம் தளபதி 67ல் நடிகை த்ரிஷா நடிக்கிறார் என்ற அறிப்பை படக்குழு அறிவித்து உள்ளது.

https://twitter.com/JudeOff3/status/1620620110921859072?s=20&t=XsUoupBRBmYcmpiVoCIM8w

Leave a Comment