சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த பிரபல நடிகை!! காரணம் இதுதான்.

0

leading actress quit from cinema field; தமிழ் சினிமாவில முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிலம்பாட்டம். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சானாகான் மற்றும் சினேகா இருவரும் நடித்திருந்தனர்.

நடிகை சானாகான் அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து தமிழில் பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு ஒரு நடிகையின் கதை போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஷாலுடன் இணைந்து தற்போது அயோக்கயா என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடித்திருந்தார். மேலும் அதனை தொடர்ந்து ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 12டில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

நடிகை சானா கான் நடன இயக்குனரான மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்ள போவதாக செய்தி பரவியது. ஆனால் அவர் துரோகம் செய்துவிட்டார். அதனால் தற்போது அவரை விட்டு விலகி விட்டார் நடிகை சானா கான்.

நான் சினிமாவில் நடித்ததன் மூலம் பணம், மரியாதை, புகழ் அனைத்தையும் சம்பாதித்தேன் அதற்காக நன்றி எனக் கூறினார். மேலும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் நான் பிறக்கவில்லை மற்றவர்களுக்கு உதவுவதற்காக தான் பிறந்துள்ளோம்.

நாம்  பிறப்பதே நாம் இறப்பற்குப் பின் நடக்கும் வாழ்வை அர்த்தம் ஆக்கிக் கொள்வதற்காக தான். அதனாலேயே நான் தற்போது சினிமாவிலிருந்து இன்றுடன் விலகுகிறேன் என கூறியுள்ளார்.