ஷங்கர் முதல் ரஞ்சித் வரை பிரபலம் அடைவதற்கு முன்பு சிறப்பு வேடத்தில் நடித்த படங்கள்.!! இதோ லிஸ்ட்.

0

leading actors and directors who started their career as a simple role in movie: சினிமாவில் உச்சத்தை அடைவதற்கு முன்பு பல பிரபலங்கள் சிறப்பு வேடத்திலும் துணை நடிகை மற்றும் நடிகராகவும் நடித்துள்ளார்கள் அப்படிதான் இன்று பிரமண்ட இயக்குனராக இருக்கும் சங்கர் இயக்குனராக ஆவதற்கு முன்பு வசந்த ராகம் படத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த த்ரிஷா ஒரு காலகட்டத்தில் நடிகையாக நடிப்பதற்கு முன்பு துணை நடிகையாக ஜோடி படத்தில் நடித்துள்ளார். அதேபோல் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் சிவப்பு ரோஜா திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அதேபோல் இன்று முன்னணி இயக்குனராக இருக்கும் முருகதாஸ் அப்பொழுது பூச்சூடவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி இன்று ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து பேரும் புகழும் பெற்று வருகிறார். ஆனால் இவர் முதன்முதலில் புதுப்பேட்டை என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் நடிகர் சித்தார்த் முதன் முதலில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இயக்குனராகவும் நடிகராகவும் கலக்கி வரும் எஸ்.ஜெ சூர்யா முதன் முதலில் அஜித்தின் ஆசை திரைப்படத்தில்தான் நடித்திருந்தார், அதேபோல் நடிகர் சமுத்திரக்கனி பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடித்திருந்தார்.

இளம் நடிகை நிவேதா தாமஸ் முதன்முதலில் குருவி திரைப்படத்தில் நடித்திருந்தார், சாய்பல்லவி கஸ்தூரிமான் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், விஜய் ஆண்டனி கிழக்கு கடற்கரை சாலை என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விமல் ஜில்லி திரைப்படத்திலும் சியாம் குஷி திரைப்படத்திலும் ரஞ்சித் சென்னை 600028 திரைப்படத்திலும் நடித்துள்ளார்கள். இப்படி பல நடிகர்கள் பிரபலமாவதற்கு முன்பு துணை நடிகை கதாபாத்திரத்திலும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான்.