அஜித் மற்றும் விஜய் உடன் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட முக்கிய நடிகர்.! யார் தெரியுமா அது.?

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர்கள் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இவர்கள் இருவரின் திரைப்படங்கள் எப்பொழுதெல்லாம் திரையரங்குகளில் வெளியாகிறதோ இருவரின் ரசிகர்கள் திரையரங்கம் அலரும் படியாக ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள்.

மேலும் தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் எடுக்க உள்ளது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இவரது பிறந்த நாள் அன்று வெளியாகும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தரும்படியாக படக்குழுவினர்கள் பர்ஸ்ட் லுக்கை வெளியிடவில்லை.அதனால் தல அஜித் ரசிகர்கள் பலரும் எப்பொழுது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட போறிங்க என கேட்டு வருகிறார்கள்.

மேலும் தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது அதை தொடர்ந்து தனது 65வது திரைப்படத்தில் இவர் விருவிருப்பாக நடித்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எங்கு நடத்தலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம் விஜய்.

இந்நிலையில் மங்காத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது நடிகர் மஹத் தல அஜித் மற்றும் தளபதி விஜயுடன் சேர்ந்து இருக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து உள்ளாராம் அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் மிகவும் இளமையாக இருக்கிறார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ajith and vijay3
ajith and vijay3

இந்தப் புகைப்படங்களை பார்த்த இருவரின் ரசிகர்களும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவது மட்டுமல்லாமல் எதற்காக மங்காத்தா படப்பிடிப்பின் போது விஜய் அங்கு சென்றுள்ளார் என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment