கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரபல முன்னணி நடிகர்.!! இந்த கோணத்தில் தெரிக்கவிடுவார்..

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் டைட்டில்  வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் அதனை தொடர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்ததும் தொடங்க உள்ளது.

தற்ப்போது உள்ள நடிகர்கள் ஹீரோ கதாபாத்திரங்களை விட வில்லன் கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நடிகர் அருண் விஜய், விஜய் சேதுபதி, பிரசன்னா, விணை,ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்கள் தற்போது வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணி தற்போது நடைபெற்று வருகிறது மேலும் இந்த நிலையில் திரைப்படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக பிரபல நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸிடம் நடிக்க பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டு வருகிறது.

ராகவா லாரன்ஸ் நடிகர்,இயக்குனர் தயாரிப்பாளர் நடன இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர்.

மேலும் ராகவா லாரன்ஸ் கமலஹாசனுடன் இணைந்து நடித்தால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கும் என படக்குழு தீர்மானித்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment