பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக மகளிர் தினத்தில் வெளியான “தலைவி” ப்ரோமோ வீடியோ .!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு  இவரின் வாழ்க்கை வரலாறைப் பற்றி படமாக எடுக்கப்படும் தலைவி என்ற திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 23 இல் வெளியாக உள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவி படத்தின் ப்ரோமோ வீடியோவை கங்கனா ரனாவத் நேற்று வெளியிட்டுள்ளார். மகளிர் தினத்தன்று வெளியிடுவதால் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ மகளிர் தின வாழ்த்துகளுடன் தயார் செய்யப்பட்டுள்ளது.

தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் அவர்கள் நடித்துள்ளார் இத்திரைப்படத்திற்கு இவர் 20 கிலோ எடையை குறைத்து நடித்துள்ளாராம்.  அது மட்டுமல்லமல் பரத நாட்டியமும் கற்று கொண்டுள்ளார்.  இத்திரைப்படத்தை தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, போன்ற மூன்று மொழிகளிலும் வெளியிட டப்பிங் வேலைகளை சமீபத்தில்தான் கங்கன துவங்கினார்.

மகளிர் தினத்தன்று தலைவி படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட கங்கனா என்ற தனது முதல் கட்ட டப்பிங் வேலையை முடித்து விட்டதாகவும்,  இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் முடிய உள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படப்பிடிப்பு வேலைகள் முழுவதும் முடிய உள்ள நிலையில் படக்குழுவினரை விட்டுப் பிரிய போவது வருத்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment