தலைவா.. என்னுடைய படத்தைப் பாருங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் – யார் அது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத மன்னனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 வருடங்களாக சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கும் ரஜினி தொடர்ந்து இப்பவும் படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் இன்னும் மக்கள் மன்றம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நபராகவே இருந்து வருகிறார் ஒருபக்கம் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சிறப்பான படங்களை பார்த்து பாராட்டியும் வருகிறார்.

ஏன் அண்மையில் வெளியான ராக்கி திரைப்படத்தை புகழ்ந்து பேசிய பேசின் அவருக்கு மேலும் பாரதிராஜா மற்றும் ரவி நடிப்பு அற்புதம் என சொல்லியிருந்தார்  அதனைத் தொடர்ந்து அடுத்த படமான 83  திரைப்படத்தையும் பார்த்து புகழ்ந்து பேசி அசத்தினார் மேலும் ரன்வீர் சிங் மற்றும் ஜீவா அவர்களுடைய நடிப்பு அட்டகாசம் எனக் கூறினார்

இப்படி சினிமா உலகில் வருகின்ற நல்ல படங்களை புகழ்ந்து பேசி நடிகர் நடிகைகளுக்கு ஊக்குவித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி தன்னுடைய படத்தையும் பார்க்க வேண்டும் என ஒரு நடிகர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தருண் குமார் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்  ரஜினி சார் நீங்கள் ஃப்ரீயாக இருக்கும்போது என்னுடைய படமான தேன் படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார் ரஜினி இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு அவருக்கு விமர்சனம் போடுவாரா இல்லையா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது இதோ தருண் குமார் தனது சமூக வலைதளத்தில் போட்ட பதிவு.

Leave a Comment