தலைவர் 169 படத்தின் கதை இப்படித்தான் நகருமா.? ஹிட் கொடுக்க காத்திருக்கும் நெல்சன்.!

rajini 169 movie
rajini 169 movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளார் அவர் இதற்கு முன்பு இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய அனைத்து படங்களுமே வெற்றிப் படங்களாக மாறியுள்ளன இதனால் ரஜினியும் நெல்சன் அமையும் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினி உடன் கை கோர்த்து ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் போன்ற ஒரு முக்கிய நட்சத்திர பட்டாளங்கள்  நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் சூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்கு எந்த மாதிரியான தலைப்பு வைக்கலாம் என படக்குழு யோசித்து வந்த நிலையில் தற்போது ஒரு புதிய பெயரை வைக்க இருக்கிறதாம்.

தலைவரின் 169 வது திரைப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தலைவர் 169 படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது குறித்து தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது அதன்படி பார்க்கையில் ரஜினியின் 169 வது படத்தில் படம் முழுக்க முழுக்க ஜெயில் மற்றும் ஜெயில் கைதிகள் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படமாக உருவாகும் என கூறப்படுகிறது .

நிச்சயம் இந்தப் படத்தில் ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால் இந்த படம் நிச்சயம் நடிகர் ரஜினி கேரியரில் ஒரு சூப்பர்ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.