தன்னுடைய தவறை தானே ஒற்றுகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..! வெள்ளை மனசுகாரர் போல..!

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன். விஜய் சேதுபதி, பகத் பாசில் இவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்று நினைத்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் புரோமோஷன்களில் வெகுவாக ஈடுபட்டு வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்துவிட்டு டெல்லி சென்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பல பேட்டிகளில் லோகேஷ் கனகராஜ் கமலுடன் பணியாற்றிய அனுபவத்தை கூறியிருப்பார்.

அதுமட்டுமில்லாமல் அவர் இயக்கிய மாநகரம், கைதி இது போன்ற திரைப்படங்கள் பற்றியும் கூட பேசி இருக்கிறார். மேலும்  நான் இந்த திரைப்படத்தில் சில காட்சிகளை இன்னும் சிறப்பான முறையில்  எடுத்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்தப்படம் வெற்றி பெற்று கொடுத்திருந்தாலும் அவர் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று தன்னடக்கத்துடன் பேசியதை ரசிகர்களை  அனைவரும் புகழ்ந்து வருகிறார்கள்.

மேலும் விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment