பொறுக்கி உனக்கு இவ்வளவு திமிர் இருக்கும் பொழுது.! அந்தத் தப்ப தட்டி கேக்குற போலீஸ்காரன் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.! வைரலாகும் லத்தி டீசர்..!

விஷால் நடித்து வரும் லத்தி திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தன்னுடைய விடா முயற்சியால் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் விஷால் இவர் தற்பொழுது காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் தான்  லத்தி இந்த திரைப்படத்தில் ஒரு அதிரடி ஆக்சன் ஹீரோ போல் அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது இந்த டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த டீசரில் தப்பு பண்ணிட்டு ஓடி ஒளியுற பொருக்கி உனக்கு இவ்வளவு திமிரு இருக்கும்பொழுது அதை தட்டிக் கேட்கிற போலீஸ் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என விஷால் பஞ்சு வசனத்துடன் ஆரம்பித்துள்ளது இந்த டீசர். மேலும் பொறம்போக்கு எல்லாம் என்னை  தேடிக்கிட்டு இருக்கீங்க வாங்கடா இங்க இருந்து ஒருத்தான் கூட உயிரோட போக முடியாது என விஷால் பஞ்சு வசனம் பேசுகிறார்.

இந்தத் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை வினோத்குமார் அவர்கள் இயக்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் விஷால் ஒரு கான்ஸ்டபில் ஆக நடித்துள்ளார்.

விஷாலுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆக அமையும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் டீசரில் அதிரடி ஆக்ஷனில் நடித்துள்ளதாக விஷாலுக்கு ஆக்ஷன் காட்சிகள் கை கொடுக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

இதோ டீசர்.

Leave a Comment