தலைக்கு மேல் எறிய போதை தள்ளாடி தள்ளாடி படப்பிடிப்புக்கு வந்த நடிகை..

கேரளாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் கூடாத நட்புடன் தவறான பழக்கத்தை கற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். அண்மையில் கூட தனது நண்பர்களுடன் சேர்ந்து பொது இடத்தில் ஒரு நபரை அடித்து துன்புறுத்திய வழக்கில் சிக்கி தலைமறைவானார்.

இந்த பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு இளம் நடிகைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது மலேசியாவில் படப்பிடிப்பு. நான்கு நாட்கள் படப்பிடிப்புக்கு வராமல் ஹோட்டல் அறையில் கதவை சாத்திக் கொண்டு இருந்துள்ளார் இதனால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.

காலை 9 மணிக்கு படப்பிடிப்பிற்கு வர வேண்டிய நடிகை மதியத்திற்கு மேல் எழுந்திருக்கவே முடியாதபடி ஒரு விதமான மயக்கத்தில் தள்ளாடிக்கொண்டே வந்துள்ளார் இதனை பார்த்து கடுப்பான இயக்குனர் இப்படியே போனால் படப்பிடிப்பை நடத்த முடியாது என்று தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்ல தயாரிப்பு நிறுவனம் படத்தில் இருந்து அவரை தூக்கி விட்டு வேறொரு நடிகையை கமிட் செய்துள்ளார்

இந்த மோசமான குடிப்பழக்கத்தால் அவரின் சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கிறது.