கார்த்தி நடித்துயுள்ள “விருமன்” படத்திலிருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் – கிராமத்து லுக்கில் அசத்தும் அதிதி சங்கர்.!

நடிகர் கார்த்தி அவரது அப்பா, அண்ணன் போல இவரும் தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிக்கின்ற திரைப்படங்கள் அனைத்தும் புதுமையாகவும் அதில் தனது திறமையை சிறப்பாக காட்டி நடித்துள்ளதால் குறைந்த திரைப்படங்களில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

மேலும் இவரது திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவதோடு மட்டுமல்லாமல் வசூல் வேட்டையும் நடத்திய அசத்துகின்றன. கடைசியாக இவர் நடித்த சுல்தான் திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றுத் தந்தது இருப்பினும் இவரது அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கின்றது.

ஏனென்றால் இவர் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருந்து வந்துள்ளன. அந்த வகையில்  பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் ஆகிய மூன்று படங்களுமே வித்தியாசமான படங்கள். இந்த படங்கள் அனைத்துமே நல்ல வெற்றியை கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா விருமன் படத்தை இயக்கி உள்ளதால் படத்துக்கான  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது மேலும் இந்த படமும் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படங்களை எடுக்கும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயின்னாக நடித்துள்ளார்.

இப்படத்தில் இருந்து தற்போது சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது கார்த்தி மற்றும் நடிகை அதிதி சங்கர் இருவரும் ரொமாண்டிக் லுக்கில்  எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

viruman

Leave a Comment

Exit mobile version